அமமுக கட்சி நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - பொது சொத்தை சேதப்படுத்தியதால் தட்டிக்கேட்டதால் பெட்ரோல் குண்டு வீச்சு
சென்னை, 05 மார்ச் (ஹி.ச) சென்னை வியாசர்பாடி இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (40). இவர் சொந்தமாக ஆயில் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். மேலும் பாலகிருஷ்ணன் அமமுக கட்சியில் பெரம்பூர் கிழக்கு மண்டல செயலாளராக பதவி வகித்து வருகிறார
Petrol


சென்னை, 05 மார்ச் (ஹி.ச)

சென்னை வியாசர்பாடி இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (40). இவர் சொந்தமாக ஆயில் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

மேலும் பாலகிருஷ்ணன் அமமுக கட்சியில் பெரம்பூர் கிழக்கு மண்டல செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

மேலும் பாலமுருகன் தனது அண்ணன் ரவி, மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் வெளியே வெடிச்சத்தம் கேட்டு கீழ் தளத்தில் வசிக்கும் அண்ணன் ரவி ஓடிவந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டை செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தது தெரியவந்தது.. உடனே ரவி தன் தம்பி பாலமுருகனுக்கு தகவல் தெரிவிக்க அவர் வெளியே வந்த பார்த்த போது வீட்டு சுவரில் பெட்ரோல் குண்டு வீசியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இருவர் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசிய கும்பலை பிடிக்க முயன்ற போது அவர்கள் மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பிச் சென்றனர். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

உடனே வீட்டில் இருந்தவர்கள் தீயை அணைத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் எம்கேபி நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

நேற்று முந்தினம் தனுஷ் உட்பட சில இளைஞர்கள் போதையில் கடை மீது கல் எறிவது, தங்கள் கடை மீது குப்பை தொட்டியை எரிவது உள்ளிட்ட செயலில் ஈடுபட்டதால் தட்டி கேட்டதாகவும் அதனால் பிரச்சனை ஏற்பட்டதாகவும், பின்னர் கோபத்தில் சென்ற அவர்கள் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசி விட்டு சென்றுள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இளைஞர்கள் நேற்று முன்தினம் சாலையின் நடுவே அராஜக செயலில் ஈடுபட்டதால் முத்துலட்சுமி மற்றும் அவரது மகன்கள் தட்டிக் கேட்டுள்ளனர் இதனால் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் நேற்று இரவு மீண்டும் தனுஷ் என்பவர் வந்து பிரச்சனை செய்ததால் இரண்டு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபத்தில் தனுஷ் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பெட்ரோல் குண்டு வீசிய தனுஷ், மோனிஷ், ஸ்டீபன், சந்தோஷ் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ