பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுவதாக நிதிஷ் குமார் அறிவிப்பு!
பீகார், 05 மார்ச் (ஹி.ச.) பிகார் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக நிதீஷ் குமார் அறிவித்துள்ளார். ராஜ்ய சபா எம்.பி.யாக தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடரப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் நிதிஷ் குமார், பாராளுமன்றத்தின் ராஜ்யசபை
பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுவதாக நிதிஷ் குமார் அறிவிப்பு!


பீகார், 05 மார்ச் (ஹி.ச.)

பிகார் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.

ராஜ்ய சபா எம்.பி.யாக தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடரப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் நிதிஷ் குமார், பாராளுமன்றத்தின் ராஜ்யசபை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக நேற்று முதலே செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இந்த செய்தியை நிதிஷ் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

பீகார் மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக நிதிஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில்,

இருபது வருடங்களுக்கு மேலாக நீங்கள் எனக்கு தொடர்ச்சியாக நம்பிக்கையும் ஆதரவும் அளித்து வருகிறீர்கள். உங்களின் நம்பிக்கையினாலும் ஆதரவினாலும்தான் பீகார் மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.

பீகார் இன்று முன்னேற்றம் அடைந்து வருவதற்கும் நீங்கள்தான் காரணம். இதற்காக நான் பலமுறை உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து இருக்கிறேன்.

என்னுடைய பாராளுமன்ற வாழ்க்கையின் ஆரம்பம் முதலே, பீகார் சட்டசபையின் இரண்டு அவைகளிலும் பாராளுமன்றத்திலும் உறுப்பினராக இருக்க வேண்டுமென நான் ஆசைப்பட்டேன். அதனால், இப்போது ராஜ்யசபை உறுப்பினராக வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்.

உங்களுடனான இந்த பந்தம் எதிர்காலத்திலும் தொடரும். வளர்ச்சி அடைந்த பீகாரை உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று நான் உறுதியளிக்கிறேன்.

புதிதாக அமையவிருக்கும் அரசுக்கு எனது முழு ஆதரவும், ஆலோசனைகளும் எப்போதும் இருக்கும்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM