நிதிஷ் குமார் இல்லத்தின் முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் - மாநிலங்களவை எம்.பி ஆவதற்கு கண்டனம்
பீகார், 05 மார்ச் (ஹி.ச.) பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராக ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டின் முன்பு கட்சி விசுவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பின
நிதிஷ் குமார் இல்லத்தின் முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் - மாநிலங்களவை எம்.பி ஆவதற்கு கண்டனம்!!


பீகார், 05 மார்ச் (ஹி.ச.)

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராக ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டின் முன்பு கட்சி விசுவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகுவதற்கு மனு தாக்கல் செய்யவுள்ளார் என்கிற செய்திகள் வெளிவருகின்றன. அவருக்கு மாறாக பாஜகவின் சார்பில் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருடன் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசியச் செயல் தலைவர் சஞ்சய் ஜா, மந்திரி விஜய் குமார் சௌதரி ஆகியோர் நேற்று (மார்ச் 4) நடத்திய கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சியினர் பட்னாவில் இருக்கும் அவருடைய வீட்டின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிதிஷ் குமார் பீகாரின் முதலமைச்சராகவே நீடிக்க வேண்டும், வேறு எவரும் எங்களுக்கு முதல்வராக தேவையில்லை என்று முழக்கங்களை எழுப்பியபடி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவைச் சேர்ந்த பலரும் இது தொடர்பாக அவர்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / JANAKI RAM