Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகிய 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 இடங்களில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் திமுகவுக்கும் 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும். இதன்படி அதிமுக சார்பில் தம்பிதுரையும் பாமகவுக்கு ஒரு இடம் வழங்கப்பட்ட நிலையில் அன்புமணியும் போட்டியிடுகின்றனர்.
தொடர்ந்து அதிமுக சார்பில் தம்பிதுரை இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருத்தனர்.
தம்பிதுரையை தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்துக்கு இன்று காலை வருகைதந்த அன்புமணியை பாமக மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் வரவேற்றனர்.
தொடர்ந்து மாநிலங்களவைத் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அன்புமணி ராமதாஸ் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
இதன்மூலம் மூன்றாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகவுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b