தீமிதி திருவிழாவில் ஏற்பட்ட தகராறு..! தள்ளு முள்ளுவில் சிக்கி 12 பேர் தீக்காயம்..!
ஆந்திரா, 05 மார்ச் (ஹி.ச.) தெலுங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் அமநகலு கிராமத்தில் ஸ்ரீ பார்வதி ராமலிங்கேஸ்வர சுவாமி உற்சவம் நடைபெற்றது. இந்த உற்சவத்தின் ஒரு பகுதியாக உற்சவர்களை சுமந்து கொண்டு பூக்குழியை (தீக்குழியை) கடந்து செல்லும் நிகழ்ச்சி ந
தீ


ஆந்திரா, 05 மார்ச் (ஹி.ச.)

தெலுங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் அமநகலு கிராமத்தில் ஸ்ரீ பார்வதி ராமலிங்கேஸ்வர சுவாமி உற்சவம் நடைபெற்றது.

இந்த உற்சவத்தின் ஒரு பகுதியாக உற்சவர்களை சுமந்து கொண்டு பூக்குழியை (தீக்குழியை) கடந்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்களுக்கிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக சிலர் நெருப்பு குழியில் விழுந்தனர்.

உடனடியாக அங்கிருந்த சக பக்தர்கள் விரைந்து செயல்பட்டு நெருப்பில் விழுந்து அலறி துடித்த பக்தர்களை துரிதமாக மீட்டனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பக்தர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு படுகாயம் அடைந்த 12 பக்தர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த அதிகாரிகள்,போலீசார் ஆகியோர் இதுபற்றி விசாரணை நடத்துகின்றனர்.

உரிய நேரத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தால் இத்தகைய சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் எதிர்காலத்திலாவது போலீசார் இந்த திருவிழாவிற்கு தேவையான அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளூர் பொது மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam