கோயில் திருவிழாவில் பங்கேற்கச் சென்ற சிறுவன் அடித்து கொலை
கேரளா, 05 மார்ச் (ஹி.ச.) கேரள மாநிலம் கொல்லத்தில் கொலை செய்யப்பட்ட சிறுவனின் சகோதரியின் வீட்டருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்கச் சென்ற சிறுவன் அடித்து கொலை பதற வைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம்
கொலை


கேரளா, 05 மார்ச் (ஹி.ச.)

கேரள மாநிலம் கொல்லத்தில் கொலை செய்யப்பட்ட சிறுவனின் சகோதரியின் வீட்டருகே

நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்கச் சென்ற சிறுவன் அடித்து கொலை பதற வைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் அருகே சக்தி குளங்கரை பகுதியில அமைந்துள்ள கோவில் திருவிழா நடைபெறுவதையொட்டி குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்ற 17 வயது சிறுவன் தனது சகோதரன் ஜெயகிருஷ்ணனுடன் திருவிழா காணச் சென்றான். தனது

சகோதரியின் வீட்டிற்கு அமைந்துள்ள கோயில் என்பதால் அந்த சிறுவன் சென்ற நிலையில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஒரு கும்பல் மது போதையில் ஹரி கிருஷ்ணவருடன் தகராறு செய்தது அப்போது ஜெயகிருஷ்ணன் தலையிட்டு சமாதானம் செய்த பின்பு சகோதரர்கள் இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர் எனினும் விடாத போதை கும்பல் அவர்களை மடக்கி பிடித்து மீண்டும் தகராறு செய்தனர்.

தகராறு உச்சத்தில்

இருவரையும் கடுமையாக தாக்கினர் மரக்கட்டைகளால் ஹரிகிருஷ்ணன் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் நினைவு இழந்து விழுந்தார்.

உடனடியாக அவரை திருவனந்தபுரம்

மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு தீவிர

சிகிச்சோளிக்கும் பலனின்றி நான்காவது நாள் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

ஹரி

கிருஷ்ணன் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் ஆவார் சம்பவம் தொடர்பாக சக்தி

குளங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பிரதிகளை தேடி

வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam