மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவுவதால், இந்தியாவில் இருந்து 281 விமானங்கள் ரத்து
புதுடெல்லி, 06 மார்ச் (ஹி.ச.) கடந்த 28ம் தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நாடுகள் ஈரான் மீது திடீர் தாக்குதல் நடத்தின. ஈரானின் அணு ஆயுத உற்பத்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் உட்பட பல இடங்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியா
மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவுவதால், இந்தியாவில் இருந்து 281 விமானங்கள் ரத்து


புதுடெல்லி, 06 மார்ச் (ஹி.ச.)

கடந்த 28ம் தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நாடுகள் ஈரான் மீது திடீர் தாக்குதல் நடத்தின.

ஈரானின் அணு ஆயுத உற்பத்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் உட்பட பல இடங்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.

இந்த சண்டையால் மத்திய கிழக்கில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக பல நாடுகள் தங்கள் விமானப் பாதைகளை மூடிவிட்டன.

இதனால், வளைகுடா நாடுகளுக்கு செல்லும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பல வளைகுடா நாடுகள் தங்கள் விமானப் பாதைகளை மூடியதால், இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் 281 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Hindusthan Samachar / JANAKI RAM