அசாமில் SU-30 MKI ரக போர் விமானம் விபத்து - இருவர் பலி
அசாம், 06 மார்ச் (ஹி.ச) இந்திய விமானப் படையின் சுகோய்-30 ரக போர் விமானம் காணாமல் போனதாக நேற்று அதிர்ச்சி தகவல் வெளியானது. அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட்டில் இருந்து புறப்பட்ட சுகோய்-30 ரக போர் விமானம் நேற்று இரவு சுமார் 7.42 மணிக்கு திடீரென ரேடாரில்
விபத்து


அசாம், 06 மார்ச் (ஹி.ச)

இந்திய விமானப் படையின் சுகோய்-30 ரக போர் விமானம் காணாமல் போனதாக நேற்று அதிர்ச்சி தகவல் வெளியானது.

அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட்டில் இருந்து புறப்பட்ட சுகோய்-30 ரக போர் விமானம் நேற்று இரவு சுமார் 7.42 மணிக்கு திடீரென ரேடாரில் இருந்து புறப்பட்ட சுகோய்-30 ரக போர் விமானம் நேற்று இரவு சுமார் 7.42 மணிக்கு திடீரென ரேடாரில் இருந்து மறைந்ததாக கூறப்பட்டது.

விமானம் காணாமல் போனது குறித்து விமானப்படை குழு ஆய்வு செய்து வந்த நிலையில், இந்திய விமானப்படையின் எஸ்யூ-30 எம்கேஐ விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் ஸ்குவாட்ரான் தலைவர் அனுஜ், லெப்டினன்ட் பர்வேஷ் துராக்கர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam