Enter your Email Address to subscribe to our newsletters

கவுகாத்தி, 06 மார்ச் (ஹி.ச.)
ரஷ்யாவின் தயாரிப்பான சுகோய் சூ 30 போர் விமானம், இந்திய விமானப்படையில் முக்கியமான ஒரு போர் விமானமாக உள்ளது.
இந்த சுகோய் சூ 30 ரக விமானங்கள் 1997 ஆம் ஆண்டு ரஷ்யாவால் இந்தியாவிடம் கொடுக்கப்பட்டது. தற்போது 250 விமானங்கள் இந்திய விமானப்படையில் உள்ளன. இதனை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் இப்போது தயாரித்து வருகிறது.
அசாம் மாநிலத்தின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள ஜோர்ஹட் விமான தளத்தில் இருந்து சுகோய்-30 ரக போர் விமானம் நேற்று புறப்பட்டது.
அந்த விமானம் இரவு 7.42 மணியளவில் ரேடாரில் இருந்து காணாமல் போனதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறினர். காணாமல் போன போர் விமானத்தை தேடும் பணி மற்றும் மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் பிறகு, பயிற்சியில் இருந்த விமானம், ஜோர்ஹட்டில் இருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் உள்ள அசாமின் கர்பி அங்லாங் பகுதியில் விபத்துக்குள்ளானது என்று விமானப்படை அறிவித்தது.
இந்நிலையில், அசாமில் நடந்த இந்த விபத்தில் விமானப்படை வீரர்கள் இரண்டு பேர் இறந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM