சென்னை உயர்நீதிமன்றத்தின் 55-வது புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று பதவியேற்றார்
சென்னை, 06 மார்ச் (ஹி.ச.) சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்த எம்.எம்.ஸ்ரீவஸ்தவா நேற்று பணி ஒய்வு பெற்றதை அடுத்து கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வரும் சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதி
Justice Sushrut Aravind Dharmadhikari takes oath


சென்னை, 06 மார்ச் (ஹி.ச.)

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்த எம்.எம்.ஸ்ரீவஸ்தவா நேற்று பணி ஒய்வு பெற்றதை அடுத்து கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வரும் சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான கொலிஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் 55-வது புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று பதவியேற்றார்.

ஆளுநர் மாளிகையில் இன்று மதியம் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தர்மாதிகாரிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இவ்விழாவில் பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் புதிய நீதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b