மார்ச் 9 ஆம் தேதி நடைபெறும் திமுக மாநாடு நடைபெறும் திருச்சி சிறுகனூரில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
திருச்சி, 06 மார்ச் (ஹி.ச.) திருச்சி மாவட்டம் சிறுகனூரில் வரும் 9ம் தேதி நடைபெறும் திமுக மாநில மாநாட்டு திடலை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
மார்ச் 9 ஆம் தேதி திமுக மாநாடு நடைபெறும் திருச்சி சிறுகனூரில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு


திருச்சி, 06 மார்ச் (ஹி.ச.)

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் வரும் 9ம் தேதி நடைபெறும் திமுக மாநில மாநாட்டு திடலை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது,

முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இதே இடத்தில், பாசனம், மருத்துவம், கல்வி வசதி உள்ளிட்ட 7 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வெற்றி பெற்றார்.

அதே போன்று இந்த மாநாட்டிலும் தமிழக நிதி நிலைக்கு ஏற்ப வருங்கால திட்டம் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார். மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று லட்சம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் விரிவான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது. எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பில்லை. 10 மருத்துவக் குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அனைவருக்கும் குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 24 ஆயிரம் வாகனங்கள் வரும் என போலீஸ் சார்பில் கூறப்பட்டுள்ளது.

போதுமான வாகன நிறுத்தும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க திமுக மாநாடு. கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து எனக்கு தெரியாது.

திமுக தலைவர் ஸ்டாலின் தான் தெரிவிப்பார். முதல்வர் ஸ்டாலின் மாலை 5.30-க்கு மணிக்கு மாநாட்டு திடலுக்கு வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b