நாகப்பட்டினம் - இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை இன்று முதல் தொடக்கம்
நாகப்பட்டினம், 06 மார்ச் (ஹி.ச.) நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வரும் சிவகங்கை எனும் பயணிகள் கப்பல் சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக
Passenger ferry service between Nagapattinam and Sri Lanka begins


நாகப்பட்டினம், 06 மார்ச் (ஹி.ச.)

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வரும் சிவகங்கை எனும் பயணிகள் கப்பல் சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்த கப்பல் போக்குவரத்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு இன்று (மார்ச் 6-ந்தேதி) முதல் மீண்டும் தொடங்குகிறது.

பயணிகள் கட்டணம். எடுத்துச்செல்லப்படும் சரக்கு அளவு ஆகியவற்றில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவித்துள்ள கப்பல் நிர்வாகம் பருவநிலை மாற்றங்கள் உள்ள நாட்களை தவிர மற்ற நாட்கள் தொடர்ந்து இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

நாகையில் இருந்து புற்றப்படும் கப்பலில் இன்று மட்டும் 77 பேர் வரை பயணம் செய்கின்றனர். அங்கிருந்து வரும் கப்பலில் 80 பேர் வரை பயணம் செய்கின்றனர்.

செவ்வாய் கிழமை தவிர மற்ற 6 நாடகள் தொடர்ந்து கப்பல் சேவை இயங்கும். மேலும் புதிய கப்பல் பணிகள் நிறைவடைந்து, அதனை இயக்குவதற்கான அனைத்து சான்றிதழ்களும் பெறப்பட்டுவிட்டன. வரும் திங்கட்கிழமை நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு புதிய கப்பல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் 150 பேர் பயணம் செய்ய முடியும், புதிய கப்பலில் 250 பேர் வரை பயணம் செய்ய முடியும்.

இதனை விட அது விரைவாக செல்லக்கூடிய கப்பல் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.

Hindusthan Samachar / vidya.b