சென்னையில் காவல் சீருடையில் ,பெண் வீட்டிற்குள் மதுபோதையில் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்த காவலர்
சென்னை, 06 மார்ச் (ஹி.ச) சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து 32 வயது பெண் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் நேற்று இரவு காவலர் ஒருவர் சீருடையிலேயே மது போதையில் அத்துமீறி நுழைந்ததாக தெரிகிறது. அதிர்ச்சியடைந்த பெண்ணிடம் காவலர் பாலியல் தொல்லை க
Pol


சென்னை, 06 மார்ச் (ஹி.ச)

சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து 32 வயது பெண் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் நேற்று இரவு காவலர் ஒருவர் சீருடையிலேயே மது போதையில் அத்துமீறி நுழைந்ததாக தெரிகிறது.

அதிர்ச்சியடைந்த பெண்ணிடம் காவலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பயத்தில் அந்த பெண், காவலரை வீட்டிற்குள்ளே பூட்டி வைத்து விட்டு வெளியே ஓடி வந்து விட்டதாக கூறப்படுகிறது.

பிறகு ஐஸ்அவுஸ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை திறந்து பார்த்த போது ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் சூர்யா என்பது தெரிந்தது. அவரை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

அவர் மதுபோதையில் இருந்ததும், ரெய்டு நடத்தி விசாரிக்க தான் சென்றதாகவும் சூர்யா தெரிவித்ததாக தெரிகிறது.

மேலும் நடத்திய விசாரணையில், அந்த பெண் மீது ஏற்கனவே சட்டவிரோதமாக 2023 இல் மதுபாட்டில்கள் விற்ற வழக்கும், 2025 இல் போதை மாத்திரை விற்ற வழக்கு என மூன்று வழக்கு இருப்பதும் தெரிய வந்தது. இதனால் நேற்று காலையே காவலர் சூர்யா அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்கிறாயா என விசாரணை நடத்துவது போல சென்று வந்துள்ளார்.

பிறகு மீண்டும் காவலர் சூர்யா மதுபோதையில் அந்த பெண் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்கிறேயா? என கூறி படுக்கை அறைக்கு சென்று காவல் சீருடை சட்டையை கழற்றிய போது அந்த பெண் பயந்து காவலர் சூர்யாவை வீடியோ எடுத்து விட்டு வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து மயிலாப்பூர் காவல்துறை துணை ஆணையர், உதவி ஆணையர் துறைரீயிலான விசாரணை நடத்தினர். காவலர் சூர்யாவை சஸ்பெண்டு செய்து கூடுதல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காவலர் சூர்யா 2017 ஆம் ஆண்டு தான் காவல்துறையில் பணிக்கு சேர்ந்துள்ளார் என்பதும் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் காவலர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்ககோரி அந்த பெண் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ