Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 மார்ச் (ஹி.ச)
சென்னை அண்ணாநகரில், பேவர் பினிஸ் ரோடு பில்டர்ஸ் அசோசியேஷன் அலுவலகத்தை திறந்து வைத்த பின்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய திருமாவளவன்,
தமிழக ஆளுநர் மாற்றப்பட்டுள்ளது மகிழ்ச்சி, அதே நேரத்தில் கேரளா ஆளுநருக்கு கூடுதலாக தமிழக ஆளுநர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இவரும் ஆர்எஸ்எஸ் பயிற்சி பட்டறையில் வளர்ந்தவர் தான். இருப்பினும் அவரது செயல்பாடு பார்த்த பின்பு தான் சொல்ல முடியும்.
திமுக 21 கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது விஜய் வருகையினால் வந்த பயத்தினால் தான் என்ற கேள்விக்கு, அப்படி சொல்வார்கள் தான் பயத்திலும் பதட்டத்திலும் உள்ளனர்.
திமுக கூட்டணி அவர் கட்சி தொடங்குவதற்கு முன்பே உருவான கூட்டணி. இதில் ஓர் இரு கட்சிகள் புதிதாக சேர்ந்துள்ளது இது ஏற்கனவே மெகா கூட்டணி தான். தவெக கட்சி தொடங்குவதற்கு முன்பே உருவான மெகா கூட்டணி அவர்கள் அப்படி பேசுவது அரசியல் அறியாமை.
பிதற்றல் , உளறல்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பேன் என்று விஜய் சொன்ன பிறகும் கூட அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிற கட்சிகளோ அல்லது திமுக கூட்டணியை எதிர்க்கிற கட்சிகளோ விஜய் இடம் செல்லவில்லை
அதனை மூடி மறைப்பதற்காக இப்படி திட்டமிட்டு பரப்புகிறார்கள்
திமுக மீது நம்பிக்கை வைத்து இங்கு வருகிறார்கள் இது மக்கள் எங்கள் மீது வைத்திருக்கிற நம்பிக்கையை காட்டுகிறது.
பீஹாரில் நித்திஷ் குமார் மீது மக்களிடையே நல்ல மதிப்பு இருந்தது.. அவர் பாஜகவுடன் என்றைக்கு சேர்ந்தாரோ அன்றைய நாளிலிருந்து அவர் மீதான நன்மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து விட்டது.
இப்போது அவரை முதல்வர் பதிவில் இருந்து ராஜினாமா செய்யக்கூடிய அளவிற்கு சென்றுள்ளார்கள் இது மிகவும் கவலை அளிக்கிறது.
இந்த நிலை அதிமுகவிற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், தொடக்கத்தில் இருந்த சுட்டி காட்டி வந்துள்ளேன். இனி போக போக அதிமுகவினர் என்னுடைய கருத்துக்களை புரிந்து கொள்வார்கள்.
நடிகரின் தனிப்பட்ட விவகாரத்தில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ