சொத்து தகராறு - மத்திய பிரதேச சிஹொரி மாவட்டத்தில் இளம் பெண் உட்பட 2 பேர் வெட்டி படுகொலை
போபால்,06 மார்ச் (ஹி.ச.) மத்திய பிரதேசம் மாநிலம், சிஹொரி மாவட்டத்தில் உள்ள தரம்புரி கிராமத்தை சார்ந்தவர் ஜெகதீஷ். இவருக்கு சிதல் (வயது 20) என்ற மகளும், குல்தீப் (வயது 19) என்ற மகனும் இருந்தனர். ஜெகதீஷுக்கும் அவருடைய சகோதரர் ஹரிசிங்கிற்கும் சொத்து
சொத்து தகராறு - மத்திய பிரதேச சிஹொரி மாவட்டத்தில் இளம் பெண் உட்பட 2 பேர் வெட்டி படுகொலை


போபால்,06 மார்ச் (ஹி.ச.)

மத்திய பிரதேசம் மாநிலம், சிஹொரி மாவட்டத்தில் உள்ள தரம்புரி கிராமத்தை சார்ந்தவர் ஜெகதீஷ். இவருக்கு சிதல் (வயது 20) என்ற மகளும், குல்தீப் (வயது 19) என்ற மகனும் இருந்தனர்.

ஜெகதீஷுக்கும் அவருடைய சகோதரர் ஹரிசிங்கிற்கும் சொத்து சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்தது. இதன் காரணமாக அடிக்கடி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், சிதலும், குல்தீப்பும் இன்று காலையில் கல்லூரிக்கு நடந்து போய்க்கொண்டிருந்தனர். அப்பொழுது ஹரிசிங்கும் அவருடைய மகனும் இருவரையும் வழிமறித்து சொத்து குறித்து வாக்குவாதம் செய்தனர்.

பின்பு மறைத்து வைத்திருந்த அரிவாள் போன்ற ஆயுதங்களால் சிதலையும், குல்தீப்பையும் ஹரிசிங்கும், அவருடைய மகனும் மாறி மாறி வெட்டினார்கள்.

இந்த பயங்கரமான தாக்குதலில் சிதலும், குல்தீப்பும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அந்த இளைஞர்கள் இருவரையும் கொலை செய்த ஹரிசிங்கையும் அவருடைய மகனையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / JANAKI RAM