மிசோரம் பல்கலைக்கழகத்தின் 20-வது பட்டமளிப்பு விழா - குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
ஐஸ்வால், 07 மார்ச் (ஹி.ச.) இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று ஐஸ்வாலில் உள்ள மிசோரம் பல்கலைக்கழகத்தின் 20வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். விழாவில் அவர் கூறியதாவது, நாட்டின் இளைஞர்கள் இந்தியா
20th Convocation Ceremony of Mizoram University


ஐஸ்வால், 07 மார்ச் (ஹி.ச.)

இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று ஐஸ்வாலில் உள்ள மிசோரம் பல்கலைக்கழகத்தின் 20வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் அவர் கூறியதாவது,

நாட்டின் இளைஞர்கள் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள் ஆவார்.

அவர்கள் தேசிய வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிக்க வேண்டும்.

மிசோரம் பல்கலைக்கழகம் நாட்டின் மிக அழகான வளாகங்களில் ஒன்றாகும். அமைதி மற்றும் நோக்கத்தில் வேரூன்றும்போது கல்வியில் சாதிக்க முடியும் என்பதற்கான அடையாளமாக இப்பல்கலைக்கழகம் திகழ்கின்றது.

கடந்த பத்தாண்டுகளில் வடகிழக்கு மாநிலத்தின் மாற்றத்தை பார்க்கையில், டெல்லியிலிருந்து தூரத்தை விட வாய்ப்புக்கு அருகாமையில் இருப்பதால் இப்பகுதி இப்போது முன்னேற்றம் பெற்றுள்ளது.

சமீபத்தில் திறக்கப்பட்ட பைராபி-சாய்ராங் ரயில் பாதை உட்பட மேம்படுத்தப்பட்ட இணைப்பு, உதான் மற்றும் பிஎம்-டிவைன் போன்ற முயற்சிகள் ஆகியவை இப்பகுதியில் வளர்ச்சியை விரைவுபடுத்தவும் வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் உதவுகின்றன.

2047 ஆம் ஆண்டுக்குள் விக்ஸித் பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை வலியுறுத்தி, இளைஞர்கள் வேலைகளைத் தேடுவதைத் தாண்டி, வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். சுற்றுலா, மூங்கிலை அடிப்படையாகக் கொண்ட தொழில்கள், இயற்கை வேளாண்மை, கைவினைப்பொருட்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் போன்ற துறைகளில் வடகிழக்கு பகுதி சாதித்து வருகின்றது.

இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தல் கவலை அடையச் செய்கிறது. போதைப்பொருட்களிலிருந்து விலகி ஒழுக்கமான மற்றும் நோக்கமுள்ள வாழ்க்கையை இளைஞர்கள் வாழ் வேண்டும்.

தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். தொழில்நுட்பத்தின் ஊழியர்களாக மாறுவதற்குப் பதிலாக தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற பாடுபட வேண்டும்.

மிசோரமின் இயற்கை பாரம்பரியம் மற்றும் உயர் கல்வியறிவு நிலைகள் பாராட்டிற்குரியது. மாநிலத்தின் பழங்குடி மரபுகள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுகளும் பாராட்டிற்குரியது. சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் இளைஞர்கள் தலைமைத்துவத்தை எடுக்க முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பட்டமளிப்பு விழாவில் மிசோரம் ஆளுநரும் பல்கலைக்கழகத்தின் தலைமை ரெக்டருமான ஜெனரல் (ஓய்வு) விஜய் குமார் சிங், முதலமைச்சர் லால்துஹோமா மற்றும் துணைவேந்தர் பேராசிரியர் திபக்கர் சந்திர தேகா, ஆசிரிய உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் பட்டம் பெறும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b