மறைந்த முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகனின் 6-வது நினைவு தினம் - முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
சென்னை, 07 மார்ச் (ஹி.ச.) முன்னாள் அமைச்சரும் திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான பேராசிரியர் அன்பழகனின் 6-வது நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று (மார்ச் 07) சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை ச
6th death anniversary


சென்னை, 07 மார்ச் (ஹி.ச.)

முன்னாள் அமைச்சரும் திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான பேராசிரியர் அன்பழகனின் 6-வது நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று (மார்ச் 07) சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டிருப்பதாவது,

பேராசிரியப் பெருந்தகை எனும் கொள்கைப் பேரொளி

கழகத்துக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் கலைஞருடன் கரம்கோத்து நின்றவர் பேராசிரியர். கலைஞரின் நிறைவுக்குப் பிறகு எனக்கும் ஆறுதலாய், அரவணைப்பாய், வழிகாட்டியாய் இருந்தவர்.

நட்புக்கும் - கொள்கைப் பற்றுக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த நம் இனமானப் பேராசிரியரின் நினைவு நாளில் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதியேற்போம்! உழைப்போம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b