கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
கோவை, 07 மார்ச் (ஹி.ச.) கோவை பீளமேடு அருகே காதலருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வாலிபர்கள் 3 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை
Coimbatore student gang rape case


கோவை, 07 மார்ச் (ஹி.ச.)

கோவை பீளமேடு அருகே காதலருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வாலிபர்கள் 3 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இதில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த கருப்பசாமி (30), அவரது சகோதரர் காளீஸ்வரன் (21), மதுரையை சேர்ந்த அவர்களது உறவினர் தவசி (20) ஆகிய 3 பேரை போலீசார் காலில் சுட்டுப்பிடித்து கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அதன்படி, மூவர் மீதும் 250 பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

72 பேரிடம் சாட்சி விசாரணை நடைபெற்ற நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் 27-ம் தேதி முடிவடைந்து மார்ச் 7-ம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி சுந்தராஜன் அறிவித்தார்.

அதன்படி, இன்று மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என கோவை அனைத்து மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தராஜன் அறிவித்துள்ளார்.

தண்டனை விபரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது:

அதில், நீதிபதி சுந்தர்ராஜன் தனது தீர்ப்பில் கூறுகையில்,

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த A-1 குற்றவாளி கருப்பசாமி,அவரது சகோதரர் A-2 குற்றவாளி காளீஸ்வரன் மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த A-3 தவசி ஆகிய மூன்று பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்படுகிறது,

என்று தீர்ப்பு அளித்தார்.

Hindusthan Samachar / vidya.b