சோழவந்தான் அருள்மிகு சனீஸ்வரன் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
மதுரை, 07 மார்ச் (ஹி.ச.) மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் சுயம்பு வடிவமாக கிழக்கு முகமாக அருள்பாலித்து வரும் அருள்மிகு சனீஸ்வரன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதற்காக இரண்டு நாட்கள் யாக பூஜைகள் நடைபெற்றது. சனி பெயர
சனிப்பெயர்சி


மதுரை, 07 மார்ச் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் சுயம்பு வடிவமாக கிழக்கு முகமாக அருள்பாலித்து வரும் அருள்மிகு சனீஸ்வரன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.

இதற்காக இரண்டு நாட்கள் யாக பூஜைகள் நடைபெற்றது.

சனி பெயர்ச்சியை முன்னிட்டு சனி பகவான் கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியானார் முன்னதாக விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், சனிப்ரீத்தி பரிகார ஹோமம் நடந்தது. சனீஸ்வர மூல மந்திர ஜெபம், தோஷ நிவர்த்தி பரிகார ஹோமம், மஹா பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. இதைத் தொடர்ந்து கடம் புறப்பாடாகி சனி பகவானுக்கு மஹா அபிஷேகம், நடைபெற்றது தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

அர்ச்சகர் ராமசுப்ரமணியன் பூஜைகள் செய்தார். ஆய்வாளர் ஜெயலட்சுமி, தக்கார் இளமதி தலைமையில் பணியாளர்கள் பூபதி வசந்த் கவிதா ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்தனர்.

தொடர்ந்து கும்பம் மீனம் ராசி முற்பட மற்ற ராசிகளுக்கும் பரிகார பூஜைகள் நடைபெற்றது.

சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மட்டுமின்றி மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சனி பகவானை தரிசனம் செய்து சென்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam