மக்கள் மருந்தக தினத்தை முன்னிட்டு, நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூறுவோம் - நயினார் நாகேந்திரன்
சென்னை, 07 மார்ச் (ஹி. ச) ஏழை, எளியோரின் உடல் நலத்தை உறுதி செய்யும் மக்கள் மருந்தகம் தினம் இன்று கொண்டாடப்படுவதாகவும் அதனால் அதற்கு காரணமாக இருக்கும் பிரதமர் மோடிக்கு நமது நன்றிகளை தெரிவிக்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள
Nainar


He


சென்னை, 07 மார்ச் (ஹி. ச)

ஏழை, எளியோரின் உடல் நலத்தை உறுதி செய்யும் மக்கள் மருந்தகம் தினம் இன்று கொண்டாடப்படுவதாகவும் அதனால் அதற்கு காரணமாக இருக்கும் பிரதமர் மோடிக்கு நமது நன்றிகளை தெரிவிக்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

மலிவான விலையில் தரமான மருந்துகளை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டு வரப்பட்ட மக்கள் மருந்தகம் திட்டத்தின் மகத்துவத்தைப் போற்றும் வகையில் இன்று நாடு முழுவதும் மக்கள் மருந்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின் விற்பனை செய்வதில் தொடங்கி கேன்சர் போன்ற தீவிர நோய்கள் வரை அனைத்து அத்தியாவசிய மருந்துகளையும் மலிவு விலையில் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள 1,535-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக வழங்கப்பட்ட வரப்பிரசாதமே,

எனவே, மக்கள் மருந்தக தினத்தை முன்னிட்டு, நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூறுவோம், மக்கள் மருந்தகத்தில் மருந்துகள் வாங்குவதை ஊக்கப்படுத்துவோம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ