Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 மார்ச் (ஹி.ச.)
இந்தியாவில் பெரிய ஸ்மார்ட் டிவிகளை வாங்குவதை விட, பெரிய திரை அனுபவத்தை தரும் ப்ரொஜெக்டர் மாடல்களுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
இந்நிலையில், 300 இன்ச் பெரிய திரை அளவு கொண்ட 4கே ப்ரொஜெக்டர் ஒன்று தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதைப்பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது, அமேசான் தளத்தில் தற்போது நடைபெற்று வரும் சிறப்பு விற்பனையில் எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர்1 பிளஸ் மாடலுக்கு 59% தள்ளுபடி செய்யப்பட்டு, ரூ.14,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதோடு, குறிப்பிட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1250 வரை தள்ளுபடி உண்டு. ஆகையால், இந்த ப்ரொஜெக்டர் மாடலை குறைந்த விலையில் வாங்கிட முடியும்.
எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர்1 பிளஸ் சிறப்பம்சங்கள்:
எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர்1 பிளஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல் 1080P பிக்சல்ஸ் மற்றும் 4கே அல்ட்ரா எச்டி ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதில் 300 இன்ச் வரை திரையை பெரிதாக்க முடியும். இதன் மூலம் உங்கள் வீட்டில் ஒரு சிறிய தியேட்டர் போன்றஅனுபவத்தை பெறலாம். பெரிய ஸ்மார்ட் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது.
எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர்1 பிளஸ் ஆனது 1500 ஏஎன்எஸ்ஐ மற்றும் 20000 லுமன்ஸ் பிரைட்னஸ் வசதியை வழங்குகிறது. மேலும் இதில் உள்ள எல்இடி லாம்ப் மூலம் 50,000 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். அதுவும் ஸ்மார்ட் டிவிகளைப் போலவே தெளிவான விஷுவல் சப்போர்ட் இதில் உள்ளது. ஆகவே, இதன் மூலம் துல்லியமான வீடியோக்களை பார்த்து மகிழலாம்.
ஏ53 குவாட் கோர் பிராசஸர் உடன் இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர்1 பிளஸ் வந்துள்ளது. இந்த பிராசஸர் வேகமான செயல்திறனை வழங்கும். மேலும், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர்1 பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எல்க்ட்ரானிக் போகஸ், ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ், ஆட்டோ டில்ட் கரெக்ட், ஆட்டோ கீஸ்டோன் போன்ற வசதிகளும் இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர்1 பிளஸ் மாடலில் இருக்கிறது.
நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் போன்ற பல ஓடிடி ஆப்களை இந்த ப்ரொஜெக்டரில் பயன்படுத்த முடியும்.
அதேபோல், வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் வசதியும் இதில் உள்ளது. இது தவிர, எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர்1 பிளஸ் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ் மற்றும் பல போர்ட்களை கனெக்ட் செய்து கொள்ளலாம். 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியும் உள்ளது.
கேமிங் பிரியர்களை கவரும் வகையில் பல சிறப்பம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளது.
புளூடூத் 5.4, டூயல் பேண்ட் வைஃபை, ஐ/ஓ போர்ட்கள், ஏயூஎக்ஸ், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.
Hindusthan Samachar / JANAKI RAM