மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அனுகு முறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை - சண்முகம்
மதுரை, 09 மார்ச் (ஹி.ச.) மத்திய அரசு உயர்த்தியுள்ள கேஸ் சிலிண்டர் விலையை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெ. சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலால்
சிபிஎம் சண்முகம்


மதுரை, 09 மார்ச் (ஹி.ச.)

மத்திய அரசு உயர்த்தியுள்ள கேஸ் சிலிண்டர் விலையை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெ. சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலால் இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என மோடி தெரிவித்தார்.

ஆனால் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 60 ரூபாய் உயர்த்தியுள்ளது.

மோடியின் விசுவாசத்திற்கு ஒவ்வொரு இந்தியரும் அபராதம் கட்ட வேண்டுமா?. உடனே உயர்த்தப்பட்ட கேஸ் சிலிண்டர் விலையை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறிப்பாக, வீட்டு உபயோக சிலிண்டர் விலை

முன்பு 868ரூபாய் - தற்போது 928 - 60ரூபாய் உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான கேஸ் முன்பு 1929ரூபாய் - தற்போது 2043.50ரூ - 115 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் சிலிண்டருக்கு பாடை கட்டும் நூதன போராட்டம். நடைபெற்றது.

இதனை தொடர்ந்து பேசிய சிபிஎம் மாநில செயலாளர்

பெ.சண்முகம்,

கேஸ் விலையை உயர்த்தியதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அப்படி பெறவில்லை என்றால் தமிழக முழுவதும் இருக்கக்கூடிய எல்லா மாவட்டங்களிலும் எங்களுடைய போராட்டம் நடைபெறும்.

ட்ரம்ப்பின் அடாவடி காரணத்துக்காக ஈரான் அடிப்படையவில்லை என்ற காரணத்தினால் இன்றைக்கு மேற்காசிய நாடுகள் முழுவதும் யுத்தத்தில் நடைபெற்று வருகிறது. 30 நாளைக்கு ரஷ்யாவில் இருந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறார்கள்.

அது சம்பந்தமாக மத்திய அரசிடம் இருந்து எந்த விதமான கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்காமல் இருக்கிறார்கள் என்பது கண்டனத்துக்குரியது. இதனால் உடனடியாக இந்த யுத்தத்தை நிறுத்தப்பட வேண்டும்.

இந்த யுத்தம் தொடர்ந்து நீடித்தால் பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் பல உயிரிழப்புகளும் ஏற்படும்

இந்த போரை நிறுத்த உலக நாடுகள் எல்லோரும் ஒன்றிணை வேண்டும்.

இந்த கேஸ் விலை உயர்வு என்பதே அனைத்து மக்களையும் பாதிக்கக்கூடும். சில ஆண்டுகளாக ஒன்றிய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே மதம் ஒரே மொழி என்கிற சித்தாந்தத்தை முன்வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஏற்கவில்லை. இத்தகைய அணுகுமுறை என்பது தவறானது மாநில அரசருடைய உரிமைகளை முழுமையாக பறிக்கக் கூடியதாகும்.

பிகாரில் நிதிஷ்குமார் தான் முதலமைச்சர் என்று பாஜக அரசு தேர்தலில் வாக்கு கேட்டு இருந்தார்கள் ஆனால் பீகாரில் ஒட்டுமொத்த மக்களை ஏமாற்றக் கூடிய வகையில் ஒரு மோசடி பாஜக அரசு ஏற்று இருக்கிறது. நிதீஷ் குமாரை ராஜினாமா செய்ய வைத்து முதலாம் அமைச்சர் பதவியை பாஜக அரசு அபகரித்துக் கொண்டுள்ளது. இது மக்களை ஏமாற்றக் கூடிய ஒரு செயல் என கண்டனத்தை தெரிவித்தார்.

மேலும், திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாளை காலை 10.30 மணிக்கு தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடைபெறும். இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை கேட்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது என கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam