Enter your Email Address to subscribe to our newsletters

அகமதாபாத், 09 மார்ச் (ஹி.ச.)
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் கடைசி ஆட்டம் நேற்று அகமதாபாத்தில் நடந்தது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. ஆகவே, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து அதிரடியாக ஆடியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சம்சன் (89 ரன்கள்), அபிஷேக் சர்மா (52 ரன்கள்), இஷான் கிஷான் (54) ஆகியோர் அதிரடியாக விளையாடினர். இந்திய அணி சிக்ஸர்களை அதிகமாக அடித்தது.
இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்தது. அதனால் நியூசிலாந்து அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பிறகு 257 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாட ஆரம்பித்தது.
பின் ஆலன், டிம் சீபராட், மார்க் சேப்மேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பின் ஆலன் 9 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா 1 ரன், பிலிப்ஸ் 5 ரன்கள், மார்க் சேப்மேன் 3 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள்.
டிம் சீபராட் மட்டும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அவர் அரைசதம் அடித்து அவுட் ஆனார். கடைசியில் 19 ஓவர்களில் நியூசிலாந்து அணி 159 ரன்கள் எடுத்து அவுட் ஆனது.
இதன் காரணமாக 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஜெயித்து சாம்பியன் பட்டத்தை பெற்றது.
இதன் மூலம் இந்திய அணி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
Hindusthan Samachar / JANAKI RAM