Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 09 மார்ச் (ஹி.ச.)
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் மத்தகிரி கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. கோவில் கட்டுமான பணி சம்பந்தமாக ஏழு ஊர் மக்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்க வந்தனர்.
அப்போது போலீசார் மற்றும் அப்பகுதியைச் சார்ந்த பொது மக்கள் மற்றும் போலீஸாரிடம் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்களின் ஐந்து நபர்களை மட்டும் போலீசார் மனு அளிக்க அனுமதித்தனர்.
அந்த மனு குறித்து அப்பகுதி மக்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது.
கரூர் மாவட்டம் கடவூர் வட்டத்தில் உள்ள மத்தகிரி கிராமத்தில் 7 ஊர் மக்கள் பரம்பரை பரம்பரையாக வழிபடும் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்நிலையில் வெளியூரில் வசித்து வரும் திருமணமாகத மாரியம்மாள் என்ற ஒரு பெண் தனக்கு கோயில் நிர்வாகத்தில் பதவி வேண்டும் இல்லையென்றால் 7 ஊருக்காரர்களையும் சாமி கும்பிட விட மாட்டேன் என நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்.
அந்த வழக்கை நாங்கள் முறியடித்து நாங்கள் வழக்கம் போல திருவிழா நடத்தி சாமி கும்பிட்டோம். அந்த பெண் இதுவரை கோவில் வரி கொடுத்தது இல்லை. கோவில் நிர்வாகம் செய்ய 7 ஊர்களில் இருந்தும் நிர்வாகிகளை நியமித்தோம்.
பின்னர் கோயில் கட்டுமான பணி செய்ய முடிவெடுத்து கோயில் கட்டுமான பணியை முக்கால்வாசி முடித்துள்ளோம்.
இந்நிலையில் அந்த பெண் மீண்டும் நீதிமன்றம் சென்று இந்த கோவில் நீர் நில புறம்போக்கில் உள்ளது என வழக்கு தொடரந்து தடை வாங்கினார்.
இதனால் தாசில்தார் அங்கு வந்து கோயில் கட்டுமான பணியை நிறுத்தி விட்டார். அதனால் இன்று மாவட்ட ஆட்சியரிடம் கோவில் பணியை தொடர அனுமதிக்க கோரி 7 ஊர் மக்கள் இங்கு வந்து மனு கொடுக்க வந்துள்ளோம்.
ஆட்சியர் இது குறித்து விசாரித்து கோவில் கட்ட எங்களுக்கு அனுமதி கொடுக்கா விட்டால் 7 ஊர்காரர்களும் எங்களின் ஆதார் கார்டு,ரேஷன் கார்டு போன்றவற்றை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam