இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு
ஷியோபூர், 09 மார்ச் (ஹி.ச.) மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் நமீபிய சிறுத்தையான ஜ்வாலா ஐந்து குட்டிகளைப் பெற்றெடுத்தன் மூலம், இந்தியாவின் சிறுத்தைகளின் எண்ணிக்கை 53 ஐ எட்டியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ
இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு


ஷியோபூர், 09 மார்ச் (ஹி.ச.)

மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் நமீபிய சிறுத்தையான ஜ்வாலா ஐந்து குட்டிகளைப் பெற்றெடுத்தன் மூலம், இந்தியாவின் சிறுத்தைகளின் எண்ணிக்கை 53 ஐ எட்டியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் இன்று தெரிவித்தார்.

இது குறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

இந்திய மண்ணில் 10வது முறையாக சிறுத்தை குட்டிகள் பிறந்துள்ளது. இது திட்ட சீட்டா தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவில் பிறந்த குட்டிகளின் எண்ணிக்கையை 33 ஆக உயர்த்தியுள்ளது.

இந்த வளர்ச்சி சிறுத்தை இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். இந்த சாதனை, திட்டத்தை களத்தில் நிர்வகிப்பதில் ஈடுபட்டுள்ள கால்நடை மருத்துவர்கள், கள ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு குழுக்களின் பணி, திறமை மற்றும் அர்பணிப்பிற்கு கிடைத்த வெற்றியாகும்.

ஜ்வாலாவும் அதன் குட்டிகளும் வலுவாக வளர்ந்து இந்தியாவின் சிறுத்தை பாதுகாப்பு பயணத்தை மேலும் வலுப்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட மற்றொரு சிறுத்தையான காமினி நான்கு குட்டிகளைப் பெற்றெடுத்த சிறிது நேரத்திலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது.

பிப்ரவரி 28 அன்று, போட்ஸ்வானாவிலிருந்து பெறப்பட்ட ஆறு பெண் சிறுத்தைகள் மற்றும் மூன்று ஆண் சிறுத்தைகள் என ஒன்பது சிறுத்தைகளை அமைச்சர் பூபேந்தர், குனோ தேசிய பூங்காவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் விடுவித்தார்.

பூங்காவின் பரந்த நிலப்பரப்பில் படிப்படியாக விடுவிக்கப்படுவதற்கு முன்பு, விலங்குகள் தற்போது பழக்கப்படுத்துதல் மற்றும் சுகாதார கண்காணிப்பு கட்டத்திற்கு உட்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b