Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 09 மார்ச் (ஹி.ச.)
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மகளிர் உரிமைத்தொகை வழங்க கோரி பெண்கள் பெருமளவில் குவிந்து மனு அளித்தனர்.
தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்படும் நிலையில், பலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், சிலருக்கு இதுவரை தொகை கிடைக்கவில்லை என்றும் கூறி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பெண்கள் மனு வழங்க மதுரை மாவட்ட ஆட்சி அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், தங்களது பெயரை மீண்டும் பரிசீலனை செய்து உரியவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தனர்.
பெண்கள் அதிக அளவில் திரண்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அணிவகுத்து நின்று வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam