Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 மார்ச் (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடி வரும் 11ஆம் தேதி திருச்சிக்கு வருகை தர உள்ளது குறித்து பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம் சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய வினோஜ் செல்வம் கூறியதாவது;
நாளை மறுநாள் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தமிழக மக்களுக்கு நாளை மறுநாள் திருச்சியில் பல திட்டங்களை அர்ப்பணிக்க உள்ளார் .
திருச்சி நிகழ்வில் திமுகவின் அவல ஆட்சியை மக்களுக்கு எடுத்துரைப்பார் .
தமிழக மக்களுக்கு தேவையான இரட்டை எஞ்சின் அரசை பிரதமர் வழங்குவார்.
இலவச கலாசாரத்தில் இருந்து உண்மையான வளர்ச்சி பாதையில் செல்லும் அரசு அமைய மாபெரும் பொதுக்கூட்டமாக திருச்சி பொதுக்கூட்டம் அமையும்.
பிரதமர் பல வேலைகளுக்கு நடுவே தொடர்ந்து தமிழகம் வருகிறார்.
பட்ஜெட்டில் பல திட்டங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன.
தேசிய ஜனநாயக கூட்டணி பலமான வலுவான கூட்டணி , எங்களை பார்த்து எதிர்கட்சிகள் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக மீது பாசம் காட்டுவது போல் திமுக காட்டிக் கொள்கிறது.
அதிமுக - பாஜக தலைவர்கள் மட்டுமல்ல,தொண்டர்கள் இணைந்து செயல்படுகின்றனர்.
திமுக கூட்டணியில் பல சிக்கல் இருப்பதால் அவசரகதியில் தொகுதி பங்கீடு செய்துள்ளனர்.
திமுக கூட்டணியை போல் குழாயடி சண்டை எங்கள் கூட்டணியில் இல்லை.
தனி நபர் எந்த கட்சியிலும் சேர்வது அவரது விருப்பம் . ஆனால் தனக்கு தகுதி இருக்கிறதோ இல்லையோ , தன்னை முதல்வராக்கி அழகுபார்த்த இயக்கத்தில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் சுயநலத்தால் திமுகவில் இணைந்து விட்டார்,திமுகவில் இணைந்தது ஓ. பன்னீர் செல்வத்துக்கு சாபக் கேடாக அமைய உள்ளது.
மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படும் சூழலில் திமுக அரசு இல்லை.
இந்த தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கான தேர்தல்.
திமுக பொய் புரட்டால் ஆட்சிக்கு வந்தது.
திடீரென திமுகவிற்கு அதிமுக மீது பாசம் ஏன்...?
கடந்த 2 வாரமாக திமுகவிற்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால அதிமுக மீது பாசம் வந்துள்ளது.
திருமாவளவன் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது வாய்திறக்கவில்லை . இந்தியா மீது இல்லாத அக்கறை இப்போது ஈரான் மீது ஏற்பட்டுள்ளது.
அவருக்கு விமான டிக்கெட் எடுத்து தருகிறேன் , அமெரிக்கா சென்று போராடிக் கொள்ளட்டும்.
திமுக தேர்தலுக்கு முன் சிலிண்டர் மானியம் தருவதாக வாக்குறுதி கூறினர்,ஆனால் அதை செய்யவில்லை.
மத்திய அரசு தனித்து சிலிண்டர் விலையை உயர்த்த முடியாது,சர்வதேச சூழல் சார்ந்தது.
வளைகுடா நாடுகளில் போர் மூண்டுள்ள நிலையில் மக்களை பாதுகாக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது.
தவெக வருமா என்று கேட்கிறீர்கள்?
வெற்றிக் கூட்டணியை நோக்கி பல கட்சிகள் வர உள்ளதாக கூறுவது வழக்கம்.
யார் வேண்டுமானாலும் வேட்பு மனு தாக்கல் வரை கூட கூட்டணியில் சேரலாம்.
எந்த கட்சிக்கு திமுகவை தோற்கடிக்கும் எண்ணம் இருக்கிறதோ அவர்கள் வந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம்.
கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் திமுகவை வீழ்த்த நினைப்போர் கூட்டணிக்கு வரலாம்.
பொது வாழ்வில் இருப்போருக்கு தனி வாழ்வு சவாலானது.
விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கருத்து கூற முடியாது.
ஆனால் பெண்கள் மனதை விஜயின் நடவடிக்கை நிச்சயம் பாதிக்கும்.அதெல்லாம் அவ்வளவு worth இல்லை என விஜய் கூறுகிறார். ஆனால் அது worth ஆ இல்லையா என்பது தேர்தல் முனிவில்
தான் விஜய்க்கு தெரியும்.
இஸ்ரேல், அமெரிக்கா , ரஷ்யா என இந்தியா பல நாடுகளுடன் நட்பாக உள்ளது.
கச்சா எண்ணெயை பொருத்தவரை நம் விருப்பத்தின்படிதான் பல்வேறு நாடுகளிடம் இருந்து வாங்கி வருகிறோம்.
பிரதமர் நிகழ்ச்சிக்கு காவல்துறை உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
விஜய் சர்க்கார் படத்தில் அரசின் இலவச பொருட்களை தூக்கி போட்டு உடைத்தார்.
அவர் அறிவித்த ' சூப்பர் சிக்சர் ' எனும் வாக்குறுதிகள் ஒருவகையான லாட்டரியின் பெயர்.
லாட்டரியுடன் ஏற்கனவே விஜயக்கு பல தொடர்புகள் உண்டு.
லாட்டரி , சூதாட்டம் போலதான் விஜயின் அரசியலும் உள்ளது.
ரஜினி அஜித் போன்ற பல முன்னணி நடிகர்கள் உள்ளனர் , ஆனால் தனது ரசிகர்களை கூட கூட்டத்தில் ஒழுங்குபடுத்த முடியாதவராக விஜய் உள்ளார் . இவரால் நாட்டை எப்படி ஒழுங்குபடுத்த முடியும்.
பக்குவமற்ற கட்சி தவெக , ஒரு பவுன் தங்கம் விலை என்ன என விஜய்க்கு தெரியுமா?
தாலிக்கு தங்கம் திட்டத்தில் 1 பவுன் எப்படி வழங்க முடியும். ஊடகங்களின் கவனத்தை பெற வக்குறுதியை அறிவித்திருப்பார் விஜய்.
இவ்வாறு அவர் கூறினார்
Hindusthan Samachar / GOKILA arumugam