Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 01 ஏப்ரல் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடன்குடி அருகே சேர்ந்த வேல்முருகன் (35) ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார்.
இவருக்கும் சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர் மெயின் பஜார் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
மேலும் விசாரணை நடத்தி, கோவிந்தன் (22) மற்றும் 2 இளஞ்சிறார்களை கைது செய்துள்ளனர்.
பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam