Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 01 ஏப்ரல் (ஹி.ச.)
2026 ஏப்ரல் 23ஆம் தேதி அன்று தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளன.
இந்த தேர்தலை முன்னிட்டு மக்களிடையே அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நெசல் பகுதியில் உள்ள எஸ் எஸ் எஸ் மகளிர் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் பங்கேற்று 100% வாக்களிக்கும் வகையில் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்.
இதில் தமிழக வரைபடம்போல் 650-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒன்றாக நின்று தமிழகத்தின் ஓவியமாக நின்றதை ட்ரோன் வீடியோ காட்சியில் பதிவு செய்யப்பட்டன.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மாவட்ட வருவாய் துறை அலுவலர் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் சிவா ஆரணி வட்டாட்சியர் அகத்தீஸ்வரன் கல்லூரி நிறுவனர் நடராஜன் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.
Hindusthan Samachar / Durai.J