2026 சட்டமன்றத் தேர்தல்- ஈரோடு கிழக்கு தொகுதி கள நிலவரம்
ஈரோடு, 01 ஏப்ரல் (ஹி.ச.) 2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு உருவாக்கப்பட்டது. இது ஈரோடு மக்களவைத் தொகுதியின் ஒரு அங்கமாகும். வணிக ரீதியாகவும், போக்குவரத்து ரீதியாகவும் இந்தத் தொகுதி ஈரோடு மாவட்டத்தின் இதயமாகக் கருதப்படுகிறது. இந்தத
n


ஈரோடு, 01 ஏப்ரல் (ஹி.ச.)

2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு உருவாக்கப்பட்டது. இது ஈரோடு மக்களவைத் தொகுதியின் ஒரு அங்கமாகும்.

வணிக ரீதியாகவும், போக்குவரத்து ரீதியாகவும் இந்தத் தொகுதி ஈரோடு மாவட்டத்தின் இதயமாகக் கருதப்படுகிறது.

இந்தத் தொகுதி பல்வேறு சமூகத்தினர் சமமான அளவில் வாழும் ஒரு பகுதியாகும்.

முக்கிய சமூகங்கள்: முதலியார், கொங்கு வேளாள கவுண்டர் மற்றும் சிறுபான்மையினர் (முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்) அதிகளவில் உள்ளனர்.

விசைத்தறி, ஜவுளி வியாபாரம், தோல் பதனிடுதல் மற்றும் அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் இந்தத் தொகுதியின் பெரும்பான்மையான வாக்காளர்கள் உள்ளனர்.

2021-ல் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, 2023-ல் நடந்த இடைத்தேர்தலில் அவரது தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவரும் சில ஆண்டுகளிலேயே காலமானார்.

இந்தத் தொகுதி மக்கள் நீண்டகாலமாக முன்வைக்கும் சில கோரிக்கைகள்:

இப்பகுதியில் உள்ள ஜவுளி ஆலைகளின் சாயக்கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதைத் தடுக்க பொது சுத்திகரிப்பு நிலையம் (CETP) அமைப்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.

போக்குவரத்து நெரிசல்: ஈரோடு பேருந்து நிலையம் மற்றும் கடைவீதிப் பகுதிகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண மேம்பாலங்கள் மற்றும் சாலை விரிவாக்கம் தேவைப்படுகிறது.

நூல் விலை உயர்வு மற்றும் மின்சாரக் கட்டணப் பிரச்சனைகளால் விசைத்தறித் தொழிலாளர்கள் சந்திக்கும் பொருளாதாரச் சிக்கல்கள்.

தற்போது இத்தொகுதி காங்கிரஸ் (திமுக கூட்டணி) வசம் உள்ளது. எனினும், வரும் தேர்தல்களில் அதிமுக தனது பலத்தை நிரூபிக்க முயற்சிக்கும்

இதுவரை வெற்றி பெற்றோர்:

2011: வி.சி. சந்திரகுமார் (தேமுதிக

2016: கே.எஸ். தென்னரசு அதிமுக

2021: திருமகன் ஈவெரா

காங்கிரஸ்

2023 இடைத்தேர்தல் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸ்

2025 இடைத்தேர்தல் வி. சி. சந்திரகுமார் திமுக

Hindusthan Samachar / Durai.J