பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஸ்ரீ சக்தி முருகன் கோவில் 13 ஆம் ஆண்டு பால்குடம் காவடி ஊர்வலம்
நாமக்கல், 01 ஏப்ரல் (ஹி.ச.) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோனேரிப்பட்டியில் அமைந்திருக்கும் அன்னை ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ சக்தி முருகன் சுவாமி 13.ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பங்குனி உத்திர திருவிழாவ
n


நாமக்கல், 01 ஏப்ரல் (ஹி.ச.)

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோனேரிப்பட்டியில் அமைந்திருக்கும் அன்னை ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ சக்தி முருகன் சுவாமி 13.ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திங்கட்கிழமை அன்று ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் இருந்து மோகனூர் ஆற்றுக்கு சென்று புண்ணிய தீர்த்தம் எடுத்து வந்தனர்.

தொடர்ந்து ஸ்ரீ சக்தி முருகனுக்கு கண் திறப்பு விழா மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை இரவு பட்டை பெருமாள் கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்து தொடர்ந்து பால் காவடி மற்றும் தீர்த்த காவடிகள் பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு காவடிகள் மற்றும் பால்குடம் ஊர்வலம் மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதி வழியாக பெண்கள், ஆண்கள் பச்சை நிற உடைகள் அடைந்து ஊர்வலமாக சென்று ஸ்ரீ சக்தி முருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த விழாவை ஸ்ரீ சக்தி முருகன் பங்குனி உத்திர திருவிழா குழுவினர் மற்றும் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமுதாயம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Hindusthan Samachar / Durai.J