Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 01 ஏப்ரல் (ஹி.ச.)
ஒடிசா மக்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி ஒரு மிக முக்கியமான நாளாகும். ஏனெனில், 1936-ஆம் ஆண்டு இதே நாளில்தான், மொழிவாரி அடிப்படையில் ஒடிசா மாநிலம் உருவாக்கப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும், ஒடிசா மாநிலம் முழுவதும் இந்நாள் மிகுந்த உற்சாகத்துடனும் கோலாகலத்துடனும் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
ஒடிசா மாநிலத்தின் உருவாக்கத்தை நினைவுகூரும் “உத்கல திவசா” (Utkala Dibasa) கொண்டாட்டத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று ஒடிசா மக்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர், ஒடிசாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியம், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் மாநிலம் செய்த பங்களிப்புகள் மற்றும் நாட்டை கட்டமைப்பதில் ஒடிசா மக்களின் அர்ப்பணிப்பை பாராட்டியுள்ளார்.
இது குறித்து குடியரசுத் தலைவர்தனது எக்ஸ் சமூக வலைத்தள கணக்கில்,
ஒடிசா தினத்தை முன்னிட்டு, ஒடிசாவைச் சேர்ந்த என் சகோதர சகோதரிகளுக்கு உளமார்ந்த வாழ்த்துகள்.
செழுமையான கலாச்சாரப் பாரம்பரியம், தொன்மையான மரபுகள் மற்றும் ஒடிசா மக்களின் பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றுக்குச் சான்றாக இந்நாள் விளங்குகிறது. நாட்டின் சுதந்திரப் போராட்டத்திலும், மாநில உருவாக்கத்திலும் ஒடிசா செய்த விலைமதிப்பற்ற பங்களிப்புகள் எப்போதும் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கின்றன.
ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் திறமை மற்றும் கடின உழைப்புடன் ஒடிசா மக்கள் ஆற்றும் பங்கு உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
இன்றைய மகிழ்ச்சியான நாளில், ஒடிசா மக்களின் செழிப்பு, நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சிக்காக பரம்பொருள் ஸ்ரீ ஜெகநாதப் பெருமானை நான் பிரார்த்திக்கிறேன்.
என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM