புதுச்சேரியில் ரோல் பறக்கும் படையினர் அதிரடி - ஓட்டுக்கு பணம் பட்டுவாடா  செய்த எட்டு பேர் சிக்கினார்!
புதுச்சேரி, 01 ஏப்ரல் (ஹி.ச.) புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை நிலைநாட்ட தேர்தல் துறை நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது இதன் ஒரு பகுதியாக முப்பது தொகுதிகளிலும் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணியை முடிக்கி விடப்பட்டு
பணம் பறிமுதல்


புதுச்சேரி, 01 ஏப்ரல் (ஹி.ச.)

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை நிலைநாட்ட தேர்தல்

துறை நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது இதன் ஒரு பகுதியாக முப்பது தொகுதிகளிலும் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணியை முடிக்கி விடப்பட்டுள்ளது.

அதில் மன்னாதிப்பட்ட தொகுதி திருக்கனூரில் லோன் மூலம் கண்காணித்த போது

வீடுகளுக்கு சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முயன்ற திருமாறன் சிலம்பரசன் மற்றும்டி.வி.என்.சக்கரவர்த்தி ஆகிய மூவரை பறக்கும் படையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

இவர்களிடம் இருந்து ரூபாய் 55 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று மங்கலம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த

ராஜேந்திரன் சுரேஷ் ஆகியோரை பறக்கும் படையினர் பிடித்தனர் அவர்களிடம் இருந்து

11,300 மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டு வில்லியனூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் லாஸ்பேட்டை நீதிபதி குடியிருப்பு அருகே பறக்கும் படையி அதிகாரி

மணிவண்ணன் தலைமையில் குழுவினர் சந்தேகம்படி வகையில் நின்றிருந்த மூவரை

பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் லாஸ்பேட்டையைச் சேர்ந்த

சந்திரசேகர்,அசோக், பாலாஜி என்பதும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து

கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2.40 லட்சம் மற்றும் பூத் ஸ்லிப்

ஆகியவை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து லாஸ்பேட்டை

காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு மூவர் மீதும் வழக்குப்பதிந்து

விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam