Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 01 ஏப்ரல் (ஹி.ச.)
கர்நாடகத்தின் துமகூர் ஸ்ரீ சித்தகங்கா மடத்தின் தலைவராக இருந்த சிவகுமார் சுவாமிகள் (ஏப்ரல் 1, 1907 – ஜனவரி 21, 2019) இந்தியாவின் மதிப்பிற்குரிய ஆன்மீக தலைவரும், கல்வியாளரும், வள்ளலரும் ஆவார்.
‘நடமாடும் தெய்வம்’ என புகழ்பெற்ற இவர், 111 ஆண்டுகள் வாழ்ந்து, ஏழை மக்களின் மேம்பாடு மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்கு கல்வி வழங்குவதை வாழ்வோடே நோக்கமாகக் கொண்டார்.
ஆன்மீகத் தலைவராகி மனிதகுலத்திற்கு அர்ப்பணித்த அவரது வாழ்நாள் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று சிவகுமார் சுவாமிகளின் பிறந்தநாளான ஜெயந்தி நாளில் நினைவுகூரி அஞ்சலி செலுத்தினார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தள கணக்கில்,
சிவகுமார் சுவாமிகள் மக்களின் நினைவில் கருணை, பணிவு மற்றும் தளராத சேவையின் வடிவமாக நிலைத்து உள்ளார்.
பிறரை மேம்படுத்துவதற்கே அர்ப்பணித்த அவரது வாழ்கை உண்மையான மகத்துவத்தை காட்டுகிறது.
கல்வி, சமூக நலன் மற்றும் ஆன்மீகத் துறைகளில் அவர் செய்த பங்களிப்புகள் சமூகத்தில் நிலையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இன்றும் அவரது வாழ்க்கை எண்ணற்ற தனிநபர்களுக்கு வழிகாட்டியாகவும், தன்னலமற்ற சேவை பாதையில் நடப்பதை ஊக்கப்படுத்தும் கண்ணோட்டமாகவும் உள்ளது.
என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM