Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 01 ஏப்ரல் (ஹி.ச)
தேர்தல் பிரச்சாரத்திற்காக திருச்சி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது பொதுமக்களிடையே சென்று அவர்களுடன் நேரடியாக கலந்துரையாடினார்.
காலை நேரத்தில் நகரின் ஒரு பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த முதலமைச்சரை கண்ட பொதுமக்கள் உடனே அவரைச் சூழ்ந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அவர் மக்களிடம் கனிவாக பேசிக் கொண்டு, அவர்கள் கூறிய கருத்துகள் மற்றும் குறைகளை கவனமாக கேட்டார். பொதுமக்களுடன் நெருக்கமாக பேசிய அவர், அனைவருடனும் கை குலுக்கி வாழ்த்துகளை பெற்றார்.
இந்தச் சந்திப்பின் போது பெண்கள், இளைஞர்கள் மற்றும் மூத்தவர்கள் என பலரும் வந்து முதலமைச்சரை சந்தித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். சிலர் அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். காலை நேரத்தில் நடந்த இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
தேர்தல் பிரச்சாரத்திற்காக திருச்சியில் தங்கியுள்ள முதலமைச்சர், இன்று நடைபெறும் பரப்புரைப் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று மக்களிடம் ஆதரவு கோர உள்ளார்.
இந்த நடைப்பயிற்சி நிகழ்வு, மக்களுடன் நேரடியாக இணைந்து பேசும் அவரது நடைமுறையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ