Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 10 ஏப்ரல் (ஹி.ச.)
மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 என இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, பாஜக, இடது முன்னணி கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி தனித்தனியாக போட்டியிடுகின்றன.
இந்தச் சூழலில் மேற்கு வங்க மாநில பாஜக தேர்தலை அறிக்கையை இன்று மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.
இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
பாஜக ஆட்சியில் பல்வேறு மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த ஆறு மாத காலத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்படும்.
பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும்.
ஊடுருவலில் ஈடுபடுபவர்கள் மீது சமரசமற்ற அணுகுமுறையை பாஜக அரசு முன்னெடுக்கும்.
மேற்கு வங்கத்தில் இருந்து பசு கடத்தல் தடுக்கப்படுவதை எங்கள் அரசு உறுதி செய்யும்.
மேற்கு வங்கத்தில் பாஜக அரசின் அனைத்து திட்டங்களும் அமல்படுத்தப்படும். இதில் ஆயுஷ்மான் பாரத் திட்டமும் அடங்கும்.
ஆட்சிக்கு வந்த 45 நாட்களில் 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) வழங்கப்படும்.
அரசியல் வன்முறைகள் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரிக்கப்படும். இதில் கட்சி வித்தியாசம் இருக்காது.
சட்டம் - ஒழுங்கு உறுதி செய்யப்படும். ஊழலற்ற ஆட்சி அமைப்போம்
உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
Hindusthan Samachar / vidya.b