Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து முன்னாள் வீரர் லட்சுமிபதி பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அணியின் பிரச்சினைக்கு முக்கிய காரணம் கேப்டன்ஷி தான் என அவர் தெரிவித்தார்.
சமீபத்திய இந்தியன் பிரீமியர் லீக்2026 போட்டிகளில் சிஎஸ்கே எதிர்பார்த்த அளவில் விளையாடவில்லை. இதற்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் எடுத்த முடிவுகளே காரணம் என பாலாஜி கூறினார்.
பந்துவீச்சாளர்களை சரியான நேரத்தில் பயன்படுத்தாதது, பீல்டிங் அமைப்பில் ஏற்பட்ட தவறுகள் மற்றும் அழுத்தமான தருணங்களில் எடுத்த முடிவுகள் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு அணியின் வெற்றியில் கேப்டனின் பங்கு மிக முக்கியம் என்பதால், அந்த பொறுப்பை கெய்க்வாட் மேலும் சிறப்பாக கையாள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், சிஎஸ்கே அணியின் தொடர்ச்சியான தோல்விகள் குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்துவர, பாலாஜியின் இந்த கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA