Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 10 ஏப்ரல் (ஹி.ச.)
நடிகர் விஜய் நடித்துள்ள “ஜனநாயகன்” திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முதலில் ஓரிரு காட்சிகள் மட்டும் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், பின்னர் இரவு முழுவதும் முழு திரைப்படமே கசிந்தது.
இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து, திரைப்படத்தின் காட்சிகள் மற்றும் முழு படத்தையும் பகிர்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் மூலம் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், “ஜனநாயகன்” படம் கசிவுக்கு காரணமானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என படக்குழு தரப்பில் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam