Enter your Email Address to subscribe to our newsletters

ஹூப்ளி , 10 ஏப்ரல் (ஹி.ச.)
ஹூப்ளி-தார்வாட் பகுதியில் உள்ள சில ஜிம்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, போலீசார் ஜிம்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர்.
நகர போலீஸ் கமிஷனர் என். சஷிகுமார் தலைமையில் ஜிம் உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பிவிபி கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த கூட்டத்தில்
200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சமீப காலமாக சில குற்றச்சம்பவங்களில் ஜிம் பயிற்சியாளர்கள் மற்றும் ஜிம் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதால் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது.
இதனால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஜிம்களுக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டும் நிலை உருவாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில் ஜிம்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
போலீசார் உத்தரவுகள்:
அனைத்து ஜிம்களிலும் கட்டாயமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்
ஜிம் பயிற்சியாளர்களின் முழு பின்னணி (background) சரிபார்க்கப்பட வேண்டும்.
ஜிம்களுக்கு வரும் உறுப்பினர்களுக்கு பயிற்சியாளர்கள் பற்றிய தகவல் வழங்கப்பட வேண்டும்
பயிற்சியாளர்கள், உறுப்பினர்களின் மொபைல் எண்களை தொடர்பு கொள்ளக் கூடாது.
இந்த விதிமுறைகளை மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஜிம் உரிமையாளர்களும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சிலர் செய்த தவறுகளால் அனைத்து ஜிம்களுக்கும் தவறான பெயர் வராமல் இருக்க, இந்த கட்டுப்பாடுகள் அவசியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA