மாநிலங்களவை நியமன உறுப்பினராக ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை நியமிக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பரிந்துரை
புதுடெல்லி, 10 ஏப்ரல் (ஹி.ச.) கடந்த 2014 ஆம் ஆண்டு பிஹார் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண், தொடர்ந்து இரண்டாவது முறையாக 2020 ஆம் ஆண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 2020 முதல் மாந
President Droupadi Murmu recommends the appointment of Harivansh Narayan Singh


புதுடெல்லி, 10 ஏப்ரல் (ஹி.ச.)

கடந்த 2014 ஆம் ஆண்டு பிஹார் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண், தொடர்ந்து இரண்டாவது முறையாக 2020 ஆம் ஆண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து 2020 முதல் மாநிலங்களவை துணைத் தலைவராக பொறுப்பேற்ற ஹரிவன்ஷ் நாராயணின் பதவிக் காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்தது.

இவருக்கு மீண்டும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், மாநிலங்களவை நியமன உறுப்பினராக இருந்த முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிக் காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது.

இதையடுத்து அந்த இடத்துக்கு ஹரிவன்ஷ் நாராயணை நியமிக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று மாநிலங்களவைக்கு பரிந்துரைத்துள்ளார்.

இதன்மூலம், மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் ஹரிவன்ஷ் நாராயண் தொடர்ந்து செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b