வாகனப் பேரணியில் வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜை முற்றுகையிட்ட பொதுமக்கள்
தூத்துக்குடி, 10 ஏப்ரல் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராகப் முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் அறிவிக்கபப்ட்டுள்ளார். அவர், இன்று தனது தொகுதிக்குட்பட்ட இருவ
Public Surround Former MLA Uravasi Amirtharaj


தூத்துக்குடி, 10 ஏப்ரல் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராகப் முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் அறிவிக்கபப்ட்டுள்ளார்.

அவர், இன்று தனது தொகுதிக்குட்பட்ட இருவப்பபுரம் பகுதியில் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வாகனப் பேரணியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென அவரது வாகனத்தை மறித்துச் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் தொகுதிக்கு நீங்கள் செய்த நன்மைகள் என்ன? வெற்றி பெற்ற பிறகு இப்போதுதான் உங்களை இந்தப் பகுதியில் பார்க்க முடிகிறது என்று கூறி மக்கள் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சமாதானப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து காவல்துறை உதவியுடன் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜின் வாகனம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

Hindusthan Samachar / vidya.b