Enter your Email Address to subscribe to our newsletters

ராமேஸ்வரம், 10 ஏப்ரல் (ஹி.ச.)
ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று கடந்த பிப்.19ஆம் எல்லை தாண்டி மீன்பிடித்தாதக 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி 12 மீனவர்களில் 8 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்
மேலும் உள்ள நான்கு மீனவர்களில் இரண்டு மீனவர்கள் ஏற்கனவே இலங்கை கடற்படையால் ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதால் அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் (இலங்கை பணம்) அபராதம் விதித்தவுடன் எஞ்சியுள்ள 2 படகு ஓட்டுநர்களுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam