பழைய குடிநீர் திட்டத்திற்கு புதிய கல்வெட்டு – எம்.எல்.ஏ மீது கிராம மக்கள் அதிருப்தி
தெலுங்கானா, 10 ஏப்ரல் (ஹி.ச.) தெலுங்கானா மாநிலம், ஜனகாமா மாவட்டம் லிங்கால கணபுரம் மண்டலத்தில் உள்ள படேல் கூடெம் கிராமத்தில், ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த குடிநீர் திட்டத்தை மீண்டும் தொடங்கியதாக கல்வெட்டு அமைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி
T


தெலுங்கானா, 10 ஏப்ரல் (ஹி.ச.)

தெலுங்கானா மாநிலம், ஜனகாமா மாவட்டம்

லிங்கால கணபுரம் மண்டலத்தில் உள்ள படேல் கூடெம் கிராமத்தில், ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த குடிநீர் திட்டத்தை மீண்டும் தொடங்கியதாக கல்வெட்டு அமைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கிராமத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

(வாட்டர் பிளாண்ட்) முன்னாள் ஸ்டேஷன் கண்பூர் எம்.எல்.ஏ டாக்டர் தாடிகொண்டா ராஜையா பதவியில் இருந்தபோது ஒதுக்கப்பட்டு, திட்டம் நிறைவடைந்ததும் அவரால் தொடங்கப்பட்டு கல்வெட்டும் நிறுவப்பட்டது.

இந்நிலையில், தற்போதைய எம்.எல்.ஏ கடியம் ஸ்ரீஹரி, அதே திட்டத்திற்கு ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கி சில மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டார்.

பின்னர் பழைய கல்வெட்டு தெரியாத வகையில் அதன் மேல் புதிய கல்வெட்டு அமைத்து, திட்டத்தை புதிதாக தொடங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், ஏற்கனவே இருந்த திட்டத்தை மீண்டும் தொடங்குவது போல காட்டி மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்த முயற்சி செய்யப்படுவதாக குற்றம் சாட்டினர்.

“இதுதானா வளர்ச்சி?” என கேள்வி எழுப்பிய அவர்கள், இந்த நடவடிக்கைக்கு எதிராக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA