Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.)
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகள் நிரந்தர கட்டிடங்களிலேயே அமைக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை தள்ளிவைத்துள்ளது.
அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் இளங்கோ சார்பில், அவரது பிரதிநிதி முத்துக்குமா பார்த்திபன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். மனுவில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, தேர்தல் பணிமனைகளை நிரந்தர கட்டிடங்களில் மட்டுமே அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதாகவும், இது செயல்பாடுகளில் சிக்கலை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த விதிகள் திருத்தப்பட்டதாகவும், தமிழ்நாடு முழுவதும் ஒரே விதமாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை பின்னர் வழங்கப்படும் எனக் கூறி தள்ளிவைத்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ