தருமபுரியில் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி அரசு பேருந்து மீது மோதிய போதை ஆசாமி கைது..!
தருமபுரி, 10 ஏப்ரல் (ஹி.ச.) தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே இன்று காலை கர்நாடகா பதிவு எண் கொண்ட வாகனத்தில் ஒருவர் பாப்பாரப்பட்டி - பாலக்கோடு சாலையில் குடிபோதையில் தாறுமாறாக காரை இயக்கி சென்றதாக தெரிகிறது. போதை ஆசாமி காரை தாறுமாறாக இயக்
விபத்து


தருமபுரி, 10 ஏப்ரல் (ஹி.ச.)

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே இன்று காலை கர்நாடகா பதிவு எண் கொண்ட வாகனத்தில்

ஒருவர் பாப்பாரப்பட்டி - பாலக்கோடு சாலையில் குடிபோதையில் தாறுமாறாக காரை இயக்கி சென்றதாக தெரிகிறது.

போதை ஆசாமி காரை தாறுமாறாக இயக்கி வாகன விபத்து ஏற்படுத்தியதை பின்னால் வந்த மற்றொரு வாகன ஓட்டி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

போதை ஆசாமி எப்படியும் சாலை விபத்து ஏற்படுத்தி விடுவார் என முன்கூட்டியே கணித்த பின்னால் வந்த வாகன ஓட்டி உடனடியாக காவல்துறை உதவி எண்ணுக்கு அழைப்பு விடுத்த தகவல் சொல்லி இருக்கிறார்.

தகவல் தெரிவித்துக் கொண்டு இருந்த பொழுது மதுபோதையில் தாறுமாறாக ஓட்டிச் சென்ற கார் எதிரே வந்த அரசு நகர பேருந்து மீது நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டது.

இதனைக் கண்ட அவ் வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மது போதையில் காரை ஓட்டி வந்த நபரைப் பிடித்து பாப்பாரப்பட்டி

காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மது போதையில் தாறுமாறாக காரை ஓட்டி வந்து

அரசு நகர பேருந்து மீது மோதிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பயணிகள் சிலர் காயமடைந்தனர்.

பின்னர் தகவல் அறிந்து வந்த பாப்பாரப்பட்டி காவல்துறையினர் போதை ஆசாமிய கைது

செய்து வழக்கு பதிவு செய்தனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P