Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதிப் பிரிவு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில், 2015 செப்டம்பர் 1-ம் தேதி அல்லது அதற்கு முன்னர் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மற்றும் அதற்கு இணையான பதவிகளில் காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், பகுதிநேர ஊதியம் அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 'டெட்' ஆசிரியர் தகுதித்தேர்வு, ஜூலை 4, 5ம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான விண்ணப்பப்பதிவு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.gov.in) பிப்ரவரி 18ம் தேதி துவங்கியது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று (ஏப்ரல் 10ம் தேதி) நிறைவு பெறுகிறது.
இதுவரை விண்ணப்பிக்காத ஆசிரியர்கள் இன்றைக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம் என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b