வானதி அக்கா 5 ஆண்டுகள் உழைக்க ஓய்வு கொடுத்துள்ளனர் - அண்ணாமலை அனல் பறக்கும் பிரச்சாரம்
கோவை, 11 ஏப்ரல் (ஹி.ச.) தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இன்று கோவையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கோவை வடக்கு தொகுதி வேட்பாளரும், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசனை எம்.எல்.ஏ வை ஆதரித்து கவுண்டம்பா
க


கோவை, 11 ஏப்ரல் (ஹி.ச.)

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இன்று கோவையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கோவை வடக்கு தொகுதி வேட்பாளரும், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசனை எம்.எல்.ஏ வை ஆதரித்து கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையம் அருகே தீவிர தேர்தல் பரப்பரையில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர் பேசும் போது:

முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்கள் அன்பான வார்த்தைகளை பயன்படுத்தவும், உதயநிதி ஸ்டாலின் அவர்கள், கனிமொழி அக்கா யாராவது எதிர்த்து பேசினால் மலர் வளையம் வைத்து விடுவதாக பேசுவதாகவும், கோயமுத்தூரில் செந்தில் பாலாஜி டவுசர் என்று எல்லாம் தரம் தாழ்த்தி பேசுகின்ற விமர்சனத்திற்கு நான் பதில் சொல்ல தயாராக இல்லை என்றும், என்னுடைய வேலையில் நான் பதில் சொல்லுகிறார் என்றவர்,

நேற்று கரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்திற்கு சென்ற போது நான்கிற்கு நான்கு அண்ணா.தி.மு.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி கோவை தெற்கு அம்மன் அர்ஜுனன் அவர்கள் வரலாறு காணாத வெற்றி பெறுவதற்கு, கோவை வடக்கில் வானதி சீனிவாசன் அக்கா தாமரை சின்னத்தில் வெற்றி பெற போகிறார்கள். அதனால் அவர்களுக்கு தோல்வி பயத்தில் உளற ஆரம்பித்து இருக்கிறார்கள் என்றவர், அதைப் பற்றி கண்டு கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இல்லை, 471 நாள் புழல் சிறையில் இருந்து விட்டு இருக்கிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

இன்றோ ? நாளையோ ? இருக்கிறது. அவர்களுக்கும் தெரியும் எத்தனை நாள் உள்ள போலாம் என்று, அதனால் அவர்கள் நன்றாக இருக்கட்டும், நாங்கள் எங்கள் பணியை தொண்டனாக செய்கிறோம் என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் மற்றும் த.வெ.க தலைவர் விஜயின் வாகனத்தில் தொண்டர்கள் ஏறும்போது தாக்கப்படுவது குறித்தான கேள்விக்கு,

அரசியலில் சகிப்புத்தன்மை அதிகமாக வேண்டும், என்னுடன் இந்த பகுதியில் மூத்த தலைவராக இருக்கக் கூடிய வடவள்ளி சந்திரசேகர் இருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்கள் இருப்பதாகவும், எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் நமக்கு சகித்து தன்மை அரசியலில் வேண்டும் என்றார்.

சகிப்புத்தன்மையை குறைந்தது என்றால், மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு உள்ளனர் என்றும், ஒவ்வொரு தலைவரும் நடந்து கொள்ளும் விதத்தை பார்ப்பதாகவும், இதே மு.க.ஸ்டாலின் மெட்ரோவில் பிடித்து ஒருவரை அப்பியதாகவும், பின்னால் தி.மு.க வினர் அவர்களுக்கு எதிரான பொது மக்களை தாக்குகின்றனர்,

நேத்து கரூர் வெள்ளமாலை விஷயத்திற்கு தி.மு.க வினர் பெண்களை தாக்கினார்கள்.

தமிழ்நாடு முழுவதும் இதனை பார்ப்பதாகவும், அண்ணன் திருமாவளவன் எப்பொழுதும் பொறுமையாக இருக்கக் கூடியவர், அவரும் அந்த தவறை செய்கிறார்.

அதையும் நாம் பார்க்கிறோம், விஜய் அவர்கள் புதிதாக வந்து உள்ளதாகவும், அதனால் சகிப்புத்தன்மை வேண்டும் என்பது என்னுடைய கருத்து, பொதுமக்கள் தெளிவாக பார்க்கிறார்கள் என்றார்.

வானதி அக்காவின் உடல்நிலை குறித்தான கேள்விக்கு,

வானதி அக்கா மிகவும் அற்புதமாக இருப்பதாகவும், நேற்று இரவு வானதி அக்காவை சந்தித்ததாகவும், வெயிலில் வேட்பு மனு தாக்கல் செய்ததில் இருந்து, வெயிலில் அதிகமாக பிரச்சாரம் செய்தார்கள்.

இன்று காலை சரியாகி சாதாரணமாகி விட்டதாக கூறியவர், இன்னும் இரண்டு நாட்களில் நாங்கள் பிரச்சாரத்தை பார்த்துக் கொள்வதாக அக்காவிடம் கூறியதாகவும், நாங்கள்

எப்படி ? பார்க்கிறோம் என்றால் வடக்கு தொகுதியில் அக்கா வானதி சீனிவாசன் அவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வேலை செய்வதற்கு அதனால் இரண்டு நாட்கள் மக்கள் ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள் மீண்டும் களத்திற்கு, இன்னும் வேகமாக, வீரியமாக வேலை செய்வார் என்றார்.

ஜனநாயக படம் வெளியானது குறித்தான கேள்விக்கு,

அது ரொம்ப தவறானது என்றும், அது தயாரிப்பு நிறுவனம் உத்தரவாதம் தர வேண்டும். காரணம் வந்து இருக்கக் கூடிய ஒரு நிமிஷம் முழு படம் என்கிறார்கள், நான் தேர்தலுக்குப் பின்பு ஜனநாயக திரைப்படத்தை திரையரங்கிற்கு சென்று பார்ப்பேன் என்றார்.

நான் விஜய் திரைப்பட ஜனநாயகத்தை ஒரு ரசிகனாக திரையரங்கு சென்று பார்ப்பேன் என்றவர், அதையும் அரசியலையும் குழப்பக் கூடாது. நான் பாரதிய ஜனதா கட்சியில் பொறுப்பில் இருக்கின்ற மனிதன் சில இடத்தில் தொண்டனாகவும், சில இடத்தில் தலைவனாகவும் இருப்பதாகவும் தான் ஜனநாயக திரைப்படத்தை திரையரங்கில் சென்று பார்ப்பேன் என்று கூறினார்.

அதனால் தயவு செய்து பொதுமக்கள் இதுபோன்று வந்தால் பார்க்காதீர்கள் என்றவர், எத்தனையோ ? பேரின் உழைப்பு, ரத்தம், வியர்வை தயாரிப்பு நிறுவனத்தின் பணம், அதுபோல் வந்தாலும் பார்க்க வேண்டாம், யாராவது அனுப்பினாலும் பார்க்க வேண்டாம் என்றார்.

அதனால் தமிழகத்தில் தேவையில்லாமல் முருகன் மத்திய அமைச்சருடைய பெயரை உள்ளே இழுப்பது அரசியல் அநாகரீகம் என்றார். யார் தவறு செய்தார்களோ ? காவல் துறையிடம் புகார் அளித்து அவர்களை உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்டுங்கள், அரசியல் லாபத்திற்காக ஏன்? பாரதிய ஜனதா கட்சியை பெயரை உள்ள இழுக்கிறீர்கள் ? யார் தவறு செய்தார்களோ அவர்களை.

பாரதிய ஜனதா கட்சி அரசியல் பண்ணாது, ஏதாவது ஒரு படத்தை நாங்கள் செய்கிறோமா ? தணிக்கை வாரியத்திற்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு ? என்று கேள்வி எழுப்பியவர், ஆதவா அர்ஜுனா அவர்களும், த.வெ.க வினர் சமூக வலைதள பக்கத்தில் சொல்லக் கூடிய கருத்தையும் வன்மையாக கண்டிப்பதாக கூறினார்.

செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதி பொறுப்பாளர்களுக்கு தங்க நாணயம் வழங்குவதாக கூறியது குறித்தான கேள்விக்கு,

என்ன வேண்டுமானாலும், கொடுக்கட்டும் அம்மன் அர்ஜுனன் அவர்கள் அருமையான மனிதர், பகுதி பொதுமக்களின் பெயர்களை சொல்லி, நடந்து சென்று வாக்கு சேகரிக்கிறார், நாம் போட்ட குழாயில் இருந்து ஒரு சொம்பு தண்ணீர் கொடு அக்கா என்று கேட்கிறார். அவ்வளவு எளிமையான மனிதர், மக்களோடு கலந்து இருக்கின்ற வெற்றி வேட்பாளராக உள்ளதாகவும்,

என்ன ஒரு ஹாட் பாக்ஸ், ஒரு குண்டா 98 சதவீதம் பேசுபொருள் இல்லாத மனுஷன் எனக் கவர்ந்து விடுவார்களா ? வரலாறு காணாத கொள்கை இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்றார்.

கரூரில் 251 பட்டியும் எம்.ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு சென்று புகார் அளித்ததாகவும், பாரதிய ஜனதா கட்சியினர் 251 பட்டியையும் மூடி விட்டதாக கூறினர்.

தன் கணக்குப்படி கோவை தெற்கு பட்டி போட முடியாது, கம்பெனி வேர் ஹவுஸ் எடுத்து மக்களை கொண்டு சென்று உள்ளே உட்கார வைத்து டீ, பிஸ்கட் கொடுத்து மக்களை ஏமாற்றிக் கொண்டு உள்ளதாக குற்றம் சாட்டினார்.

அதையும் நாங்கள் முறைப்படி புகார் அளித்து உள்ளதாகவும், 18 சுயேச்சை வேட்பாளர்களும் மிரட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்றும் மக்கள் கூறுவதாக கூறியவர், அவர்கள் தி.மு.க காரர்கள் போன்று பிரச்சாரம் செய்வதாகவும், ஒரு தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி, 18 சுயேட்சை வேட்பாளர்களும் தி.மு.க விற்கு வேலை செய்வதாக கூறியவர், 19 பேர் சிட்டி ரோபோட் ஒரு திரைப்படத்தில் செல்வது போல் 19 ரோபோட்கள் நடந்து சென்று கொண்டு உள்ளதாகவும், 19 ரோபோட்டுகளையும் பேட்டரி கழட்டி விட்டு கரூருக்கு அனுப்பி விடுவதாக கூறினார்.

Hindusthan Samachar / Durai.J