Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச)
சென்னை எழும்பூர் மதுரை வைகை விரைவு ரயில் நாளை(ஏப்ரல் 12) தாமதமாக புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்தில் சிங்கப்பெருமாள்கோவில் செங்கல்பட்டு இடையே பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையடுத்து சென்னை எழும்பூர் மதுரை வைகை விரைவு ரயில் நாளை
(ஏப்ரல் 12) 1 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்பட வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 1 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b