Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 11 ஏப்ரல் (ஹி.ச.)
மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று காலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாநிலத்தின் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள ஹிங்கொலி மாவட்டம் நண்டட் கிராமத்தை மையமாக கொண்டு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அம்மையத்தின் தகவலின்படி நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.
இன்று காலை 8.45 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகள், கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் அண்டை நகரங்களிலும் உணரப்பட்டது. அதேவேளை, இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் காயம் உள்பட எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
நிலநடுக்கம் காரணமாக ஹிங்கோலி மாவட்டத்தின் பாங்ரா ஷிண்டே கிராமத்தில் உள்ள சில வீடுகள் மற்றும் சமுதாயக் கூடங்களில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதாக, ஹிங்கோலி மாவட்ட ஆட்சியர் ராகுல் குப்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b