Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 11 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026, வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள தமிழகத் தேர்தல் சிறப்புப் பார்வையாளர் பிரதாப் சிங் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேர்தல் செலவினங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பறிமுதல்கள் குறித்து ஒருங்கிணைப்பு மற்றும் அமலாக்கத்துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வுக் கூட்டத்தில் சிறப்புப் பார்வையாளர் பிரதாப் சிங் பேசுகையில்,
வரும் சட்டமன்றத் தேர்தலைச் சுதந்திரமான, நியாயமான மற்றும் அனைவரும் எளிதில் அணுகக்கூடிய வகையில் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகளை எவ்வித சமரசமுமின்றி மிகக் கடுமையாக அமல்படுத்த வேண்டும். உரிய நடைமுறைகளைப் பின்பற்றித் தேர்தல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும்.
என்று கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான விஷு மகாஜன், முன்னிலை வகித்தார். மேலும், பொதுப் பார்வையாளர்கள் எலுச்சூரி ரத்னாகர ராவ் (விளாத்திகுளம் / தூத்துக்குடி), சோடிங்புயீ, (திருச்செந்தூர் / திருவைகுண்டம்), அரவிந்த் குமார் வெர்மா, (ஓட்டப்பிடாரம் / கோவில்பட்டி), காவல் பார்வையாளர் ஹியர்மத் சுதிர் கல்யா, செலவினப் பார்வையாளர்கள் அனுப் குமார் ஜெயின், சிவ பிரசாத் பால், நகுல் அகர்வால், மற்றும் சன்னி கச்வாஹா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சி. மதன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா. ஐஸ்வர்யா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b